நாடுமுழுவதும் CBSE பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி - பாதுகாப்பு நெறிமுறைகளை வெளியிட்டது CBSE

May 25 2020 11:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

CBSE பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நெறிமுறைகளை CBSE நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால், மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், CBSE பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இணையத்தில் வரம்புமீறிய செயல்கள் நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து ஆன்லைனில் செயல்பாடுகள் குறித்த வழிகாட்டு முறையை CBSE வெளியிட்டுள்ளது.

பிறருக்கு பகிரும் புகைப்படங்கள், வீடியோக்களில் கவனமாக இருக்க வேண்டும் எனவும், மாணவர்கள் ஆன்லைன் கலந்துரையாடுவதில் வரம்பு மீறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவியர் பதிவேற்றும் புகைப்படங்கள் தவறானவர்களின் கைகளில் கிடைத்தால், அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் எனவும் CBSE எச்சரித்துள்ளது. மாணவியர்களை மரியாதையுடனும், கண்ணியத்துடனும் அணுக வேண்டும் எனவும், புகைப்படம், வீடியோ கேட்கும் அறிமுகம் இல்லாதவர்களின் தொடர்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00