புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் ரத்த மாதிரி சோதனைகளை மேலும் அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம் - இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தீவிரம்

May 26 2020 11:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

லட்சக்‍கணக்‍கான புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்‍கு திரும்பி வருவதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம், மாநில அரசுகளுக்‍கு ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

கொரோனா தேசிய ஊரடங்கால் வெளி ஊர்களில் சிக்‍கிக்‍கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள், சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் மூலம், சொந்த மாநிலங்களுக்‍கு அனுப்பிவைக்‍கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு, சொந்த ஊர் வரும் தொழிலாளர்கள், கொரோனா சோதனைக்‍கு உட்படுத்தப்படுகின்றனர். இதன் காரணமாக, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தம், மாநில அரசுகளுக்‍கு ஏற்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் சார்பாக தற்போது 610 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருவதாவும், நாள் ஒன்றுக்‍கு சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அது கூறியுள்ளது. இந்த சோதனைகளை, தற்போது நாள் ஒன்றுக்‍கு 2 லட்சம் என்ற அளவுக்‍கு அதிகரிக்‍க தீவிர முயற்சிகள் எடுக்‍கப்பட்டு வருவதாகவும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00