கொரோனா ஊரடங்கு காரணமாக ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் பணத்தை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் அறிவிப்பு

May 27 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா ஊரடங்கு காரணமாக, ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட் பணத்தை திரும்பப் பெறுவதற்கான தேதிகள் அறிவிக்‍கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ரயில்வே கவுண்டர்களில் முன்பதிவு செய்தவர்களுக்கான பணம் இன்னும் திருப்பித் தரப்படவில்லை. இதனால் கடந்த மார்ச் 24ம் தேதிமுதல் வரும் ஜூன் 30ம் தேதி வரை, முன்பதிவு செய்தவர்கள் இன்று முதல், கவுண்டர்களில் பணத்தை திரும்பப்பெறலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள், ஜூன் 3ம் தேதி முதல் பணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் - ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள், ஜூன் 9ம் தேதி முதல், கவுண்டர்களில் பணத்தை திரும்பப் பெற்றுக்‍கொள்ளலாம் என்று அறிவிக்‍கப்பட்டுள்ளது.

மே 1ம் தேதி முதல் மே 15ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள், ஜூன் 16ம் தேதி முதல் பணத்தை திரும்பப் பெற்றுக்‍கொள்ளலாம் - மே 16ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை, முன்பதிவு செய்தவர்கள், ஜூன் 23ம் தேதி முதல் பணத்தை திரும்பப் பெற்றுக்‍கொள்ளலாம் - ஜூன் 1ம் தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்கள், ஜூன் 28ம் தேதி முதல் தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுக்‍ கொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

இந்த தேதிகளில் பணத்தை திரும்பப் பெற முடியாதவர்கள், பயணத்தேதியில் இருந்து 180 நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00