தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட 4 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணத்தை நீக்கியது ஐ.சி.எம்.ஆர். - சாதாரண மக்‍களுக்‍கு ஏற்ற வகையிலான கட்டணத்தை நிர்ணயித்துக்‍ கொள்ளவும் அறிவுறுத்தல்

May 27 2020 11:37AM
எழுத்தின் அளவு: அ + அ -

தனியார் ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட 4,500 ரூபாய் கட்டணத்தை நீக்குவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தனியார் பரிசோதனை மையங்களில், கொரோனா பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 4,500 ரூபாய் கட்டணத்தை நீக்குவதாக ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ளது. முதலில் வெளிநாடுகளில் இருந்து மட்டுமே கொரோனா பரிசோதனை கருவிகள் வரவழைக்கப்பட்டதால், அதற்கான செலவீனத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாகவும், தற்போது கொரோனா பரிசோதனைக்கு உள்நாட்டிலேயே பல கருவிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால் இந்த கட்டணத்தை நீக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பரிசோதனை மையங்கள், சாதாரண மக்களும் பரிசோதனை செய்து கொள்ளும் வகையில், கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00