அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிகளுக்‍கு கொரோனா பரிசோதனை அவசியமா? - நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு மாநிலங்களில் நீடிக்‍கிறது குழப்பம்

May 28 2020 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தாக்‍கத்தால் இந்தியாவில் சுமார் 6 லட்சம் அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்‍கப்பட்டுள்ள நிலையில், எவ்வித அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பும், நோயாளிகளுக்‍கு கொரோனா பரிசோதனை அவசியம் என சில தனியார் மருத்துவமனைகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகிவுள்ளது.

உலகம் முழுவதும், பல்வேறு நோய்களால் பாதிக்‍கப்பட்டவர்களுக்‍கு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த 2 கோடியே 80 லட்சம் அறுவை சிகிச்சைகள், கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்‍கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவில் மட்டும் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் ஒத்திவைக்‍கப்பட்டுள்ளன. இந்நிலையில், எவ்வித அறுவை சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பும், நோயாளிகளுக்‍கு கொரோனா பரிசோதனை அவசியம் என குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சில தனியார் மருத்துவமனைகள் வலியுறுத்தி வருகின்றன. அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர்கள் பாதிக்‍கப்படக்‍கூடாது என்பதால், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளதாக மருத்துவமனைகள் தெரிவித்துள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராததால், நோயாளிகள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00