ஒட்டுமொத்த தேசத்திற்கும் கேட்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அழுகுரல், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு மட்டும் ஏன் கேட்கவில்லை? - சோனியா காந்தி கண்டனம்

May 28 2020 6:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒட்டுமொத்த தேசத்திற்கும் கேட்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அழுகுரல், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு மட்டும் ஏன் கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஸ்பீக்‍ ஆஃப் இந்தியா பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து திருமதி. சோனியா காந்தியின் கருத்துகள் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா ஊரடங்கால் கடுமையான நிதி நெருக்‍கடியில் சிக்‍கியுள்ள ஏழை மக்‍கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, கைகளில் நேரடியாக பணம் வழங்க வேண்டும் என்று திருமதி. சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். அடுத்த 6 மாதங்களுக்கு, ஏழை குடும்பங்கள் அனைத்திற்கும் மாதந்தோறும் 7 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வேண்டும் என்றும், முதல் கட்டமாக உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அளிக்‍க வேண்டும் என்றும் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளார். நாட்டு மக்‍கள் அனைவருக்‍கும் கேட்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் அழுகுரல், மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு மட்டும் ஏன் கேட்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ள அவர், புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும், பாதுகாப்புடன் சொந்த ஊர் செல்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00