இந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து ரஷ்யா சென்ற ஏர் இந்தியா விமான பைலட்டுக்‍கு கொரோனா - தொற்று உறுதியானதால் மீண்டும் டெல்லி திரும்பியது விமானம்

May 30 2020 3:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்தில், விமானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, விமானம் மீண்டும் டெல்லி வந்‌தடைந்தது.

வந்தே பாரத் தி‌ட்டத்தின் கீழ், வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. இதன்படி, ரஷ்யாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, டெல்லியில் இருந்து அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவுக்கு, ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. உஸ்பெகிஸ்தான் நாட்டின் விமானத் தளத்திற்கு ஏர் இந்தியா விமானம் சென்ற போது, அங்கு நடத்தப்பட்ட சோதனையில், விமானிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பாதி வழியில் ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லிக்கே வந்தடைந்தது. விமானத்தில் பயணித்த விமான ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோத‌னை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கி‌டையே, ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்க மற்றொரு விமானம் சென்றுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00