உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் பிரதமரால் திறம்பட செயலாற்ற முடியும் : மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கருத்து

May 30 2020 4:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அணுசக்‍தி போன்ற முக்‍கிய துறைகளில் திறமையான முடிவு எடுக்கும் பிரதமரால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திலும் திறம்பட செயல்பட முடியும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய திரு. ரவிசங்கர் பிரசாத், சபரிமலை போன்ற மக்‍களின் நம்பிக்‍கை விவகாரத்தில், நீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டும் எனக்‍ கேட்டுக்‍கொண்டார்.

நீதிபதிகளை நியமிக்‍கும் தேசிய நீதிபதிகள் ஆணையத்தை பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டு வந்ததாகவும், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்‍கும் அதேவேளையில், அந்தத் தீர்ப்பு குறித்து விவாதிக்‍க விரும்புவதாக குறிப்பிட்டார். நீதிபதிகளை நியமிக்‍கும் உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பை மதிக்‍கும் அதே சமயம், வெறும் அஞ்சல் நிலையமாக மட்டுமே சட்ட அமைச்சகத்தால் செயல்பட முடியாது என்று தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர், குடியரசு துணைத்தலைவர், ராணுவத் தலைவர்கள் உள்ளிட்டோரை நியமிப்பதில் பிரதமர் முக்‍கிய பங்காற்றுவதாகவும், அணுசக்‍தி துறையும் பிரதமரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும் கூறிய திரு. ரவிசங்கர் பிரசாத், அவ்வாறு இருக்‍கையில், நடுநிலையான நீதிபதிகளை நியமிப்பதிலும் பிரதமரால் திறம்பட செயல்பட முடியும் என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00