இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்க வியூகம் தேவை : எஸ்.பி.ஐ. பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தகவல்

May 31 2020 3:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, மதிநுட்பத்துடன் ஊரடங்கை நீக்குவதற்கான வியூகத்தை அமைக்‍க வேண்டும் என ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பொருளாதார ஆராய்ச்சி ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத வகையில், 2019-20 காலகட்டத்தில் 4 புள்ளி இரண்டு சதவீதமாக என்பதாக சரிந்தது. இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் இடையிலான காலக்கட்டத்தில் 3 புள்ளி ஒன்று சதவீதம் என்ற அளவிற்கு வீழ்ச்சி அடைந்தது. இதுதான், கடந்த 40 காலாண்டுகளின் மோசமான சரிவாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் எஸ்.பி.ஐ. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கலந்துரையாடலானது, வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு இடையில் என்பதிலிருந்து, வாழ்க்கை மற்றும் வாழ்க்கைக்கு இடையில் என்ற நிலைக்கு நகர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. எனவே, மதிநுட்பம் வாய்ந்த ஒரு ஊரடங்கு வியூகத்தை நாம் நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என்றும், ஏனெனில், இந்த நீண்ட ஊரடங்கு மிக மோசமான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.

கடந்த கால அனுபவங்களைப் பார்க்கையில், பொருளாதார சரிவிலிருந்து மீண்டுவர, ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை ஆகியுள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00