கொரனோனாவிற்கு எதிரான போராட்டதை மக்‍கள் தீவிரமாக தொடர வேண்டும் - தளர்வுகள் அறிவிக்‍கப்பட்டுள்ளதால் மேலும் முன்னெச்சரிக்‍கையுடன் ​​இருக்‍க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

May 31 2020 12:58PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் மேலும் முன்னெச்சரிக்கையுடன் கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் திரு.நரேந்திர மோதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் வானொலி மூலமாக நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு.நரேந்திரமோதி, உரையாற்றினார். மக்களின் சேவை மனப்பான்மையும், ஒற்றுமையும் இந்த கொரோனா போரில் வெளிப்படுவதாகவும், கொரோனைவை எதிர்த்துப் போராடி வரும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசியப் பணியாளர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கூறினார். நாடு முழுவதும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் முன்னெச்சரிக்கையுடன், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோதி கேட்டுக் கொண்டார். பாலைவன வெட்டுக்கிளிகள் தாக்கத்தில் இருந்து விவசாயிகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெட்டுக்கிளி பிரச்னையை கையாள புதிய உத்திகள் மற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கொரோனா தாக்குதலால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஏழைகள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோதி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00