மகாராஷ்ட்ரா சென்றடைந்தது கேரள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழு - கொரோனா பாதிப்பை சமாளிக்க ஏற்பாடு

Jun 1 2020 3:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா பாதிப்பால் நெருக்‍கடியில் தவிக்‍கும் மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு உதவ, கேரளாவில் இருந்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும், மும்பைக்‍கு அனுப்பி வைக்‍கப்பட்டுள்ளனர்.

கொரோனா தாக்‍கத்தால் நாட்டிலேயே மஹாராஷ்ட்ரா மாநிலம் அதிகம் பாதிக்‍கப்பட்டுள்ளது. அங்கு 65 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோருக்‍கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, கேரளாவில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாராஷட்ராவில் நாளுக்‍கு நாள் அதிகரிக்‍கும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை தடுக்‍க, அம்மாநில அரசு, கேரளாவின் உதவியை நாடியது. அனுபவம் வாய்ந்த மருத்துவ வல்லுநர்கள் மற்றும் செவிலியர்களை தங்கள் மாநிலத்திற்கு அனுப்பி வைக்‍குமாறு மகாராஷ்டிர முதலமைச்சர் திரு. உத்தவ் தாக்‍ரே கேரள முதலமைச்சர் திரு. பினராயி விஜயனிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, கொரோனா பாதிப்பால் நெருக்‍கடியில் தவிக்‍கும் மஹாராஷ்ட்ரா மாநிலத்திற்கு உதவ, கேரளாவில் இருந்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும், மும்பை சென்றுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00