இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியது - மருத்துவ சங்கங்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தகவல்

Jun 1 2020 3:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறியுள்ளதாக மருத்துவ சங்கங்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 7ம் இடத்தில் உள்ள நிலையில், சமூக பரவல் இன்னும் ஏற்படவில்லை என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வந்தது. இந்நிலையில், இந்திய பொது சுகாதார சங்கம், இந்திய தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்தின் சங்கம் மற்றும் இந்திய தொற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் ஆகியவை கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. அதில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சமூக பரவல் காணப்படுவதாகவும், இந்த நேரத்தில் கொரோனா தொற்றை முழுமையாக அகற்றுவது சாத்தியமில்லாதது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான ஊரடங்கு பின்பற்றப்பட்ட போதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00