கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தல்

Jun 2 2020 11:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு குடிமகன்களுக்கும் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என பிரதமர் திரு. நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறைக்கு உதவ, புதிய இணையதளத்தை பிரதமர் திரு. நரேந்திர மோதி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய இந்த இணையதள உதவும் என்றும், கொரோனாவுக்கு எதிராக போராட, ஒவ்வொருவரிடமும் நல்லிணக்கம், கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என்றும் தெரிவித்தார்.

கடினமான சூழ்நிலைகளில் இருந்து மக்கள் வெளியேற திருவிழாக்கள், இசை பெரிதும் உதவியுள்ளன என்றும், யோகா மற்றும் இசை மூலம் நமது உள்சக்தியை நாம் கட்டுப்படுத்தும் போது மகத்தான ஆற்றல் கிடைக்கிறது என்றும் பிரதமர் திரு. மோதி கூறினார்.

இசையில் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் தேவைப்படுவது போல், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு, ஒவ்வொரு குடிமகன்களுக்கும் நல்லிணக்கம் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை என்றும், 130 கோடி இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக கைதட்டியும், இசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர் என்றும் பிரதமர் ‍மோதி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00