மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களை அச்சுறுத்தும் நிசார்கா புயல் - மீட்புக்‍ குழுவினர் விரைந்தனர்

Jun 2 2020 12:53PM
எழுத்தின் அளவு: அ + அ -

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களை நிசார்கா புயல் நாளை தாக்க உள்ள நிலையில், மீட்பு பணிக்காக 21 பேரிடர் மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் S.N.Pradhan தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் சமீபத்தில் உருவான உம்பன் புயல், மேற்கு வங்கத்தை தாக்கி பெரும்சேதம் ஏற்படுத்தியது. இந்நிலையில். அரபிக்கடலில் புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் படிப்படியாக நகர்ந்து, நாளை காலை மகாராஷ்டிரா மற்றும் குஜராத் கடற்கரைப்பகுதிகளை சென்றடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் மீட்பு பணிக்காக 21 பேரிடர் மீட்பு குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தலைவர் S.N.Pradhan தெரிவித்துள்ளார் புயலை எதிர்கொள்ள முழு வீச்சில் தயாராகி வருவதாகவும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் 10 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மீட்பு நடவடிக்கையில், மத்திய, மாநில அரசுகள் இணைத்து பணியாற்றி வருவதாகவும் S.N.Pradhan தெரிவித்தார்.

இதனிடையே, மும்பையில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என எச்சரிக்‍கப்பட்டுள்ளதால், அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00