விவசாயம் மற்றும் தொழில் முனைவோரால் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் : சி.​ஐ.ஐ ஆண்டு கூட்டத்தில் பிரதமர் மோதி உரை

Jun 2 2020 1:09PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரால் நாட்டின் பொருளாதாரம் நிச்சயம் மீட்டெடுக்‍கப்படும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சி.​ஐ.ஐ- அமைப்பின் 125 ஆண்டு கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, கொரோனா தொற்றால் இழந்த பொருளாதாரத்தை நிச்சயம் மீட்டெடுப்போம் என்று உறுதி பட தெரிவித்தார். தற்போதைய சூழலில் மக்‍களின் ​உயிரையும் பொருளாதாரத்தையும் காப்பாற்ற வேண்டி உள்ளதாக தெரிவித்த பிரதமர்,​ இந்தியர்களின் படைப்பாற்றால் மற்றும் திறமை மீது தமக்‍கு நம்பிக்‍கை உள்ளதாக குறிப்பிட்டார். ஊரடங்கால் மிகப்பெரிய அளவில் நன்மை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயம், தொழில் முனைவோரால் பொருளாதாரம் மீண்டும் வலுப்பெறும் என நம்பிக்‍கை தெரிவித்தார். இந்தியாவில் 74 கோடி மக்‍களுக்‍கு ரேஷன் பொருட்கள் சென்று சேர்ந்துள்ளதாகவும் ஏழை மக்‍களுக்‍கு 53 ஆயிரம் கோடி நிதிஉதவி வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் பொருளாதாரத்தை பலப்டுத்துவதே முதல் நடிவடிக்‍கை என்ற கூறினார்.

உறுதியான நம்பிக்‍கை, முதலீடு, உள்கட்டமைப்பு படைப்பாற்றல் தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்‍க அடிப்படை என்றும் விவசாயிகள் தங்கள் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்த அவர் அரசு தலையீடு இல்லாத பொருளாதார நடவடிக்கை உறுதி செய்யப்படும் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00