இந்தியா-சீனா இடையே நீடிக்கும் எல்லை பிரச்சனை விவகாரம் - இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

Jun 3 2020 2:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இந்தியா, சீனா இடையே கடந்த 5-ம் தேதி முதல், லடாக் மற்றும் சிக்‍கிம் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இரு எல்லையிலும் சீனப் படைகள் அத்துமீறியதால், பதில் நடவடிக்‍கையாக, அங்கு இந்திய ராணுவமும் குவிக்‍கப்பட்டுள்ளது. போருக்‍கு தயாராகும்படி, சீன வீரர்களுக்‍கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டதாக தகவல் வெளியான நிலையில், இந்தியா-சீனா இடையே சமரசம் செய்துவைக்‍க தயார் என அமெரிக்‍கா தெரிவித்தது. அமெரிக்‍காவின் யோசனையை இரு நாடுகளும் நிராகரித்து, பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண முற்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியா-சீனா எல்லை பிரச்சனையை தீர்க்க இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் வரும் 6-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின் மூலம் சீனாவுடனான எல்லைப் பிரச்னைக்‍கு சுமுக தீர்வு கிடைக்‍கும் என ராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00