இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றக்‍கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனு - விசாரிக்‍க உச்சநீதிமன்றம் மறுப்பு - மத்திய அரசிடம் முறையிட மனுதாரருக்‍கு அறிவுறுத்தல்

Jun 3 2020 2:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றக்‍கோரி தாக்‍கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்‍க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இதுகுறித்து மத்திய அரசிடம் முறையிட மனுதாரருக்‍கு நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.

இந்தியா எனும் பெயர், ஆங்கிலேயர் காலத்தில் வைக்கப்பட்டதால், அதனை பாரத் அல்லது இந்துஸ்தான் என மாற்றம் வேண்டும் என நமா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தார். இந்தியா என்று சொல்லும்போது, அது, ஆங்கிலேயேர்களிடம் நாம் அடிமைப்பட்டிருந்ததை நினைவூட்டுவதால், அதனை மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்‍கை விசாரிக்‍க மறுத்த உச்சநீதிமன்றம், மனுவை இன்று தள்ளுபடி செய்தது. இந்தியா ஏற்கனவே பாரத் என அழைக்கப்படுவதாக தெரிவித்த நீதிபதிகள், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றி அமைக்கும்படி உத்தரவிட முடியாது எனக்‍ கூறினர். இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு அளிக்க மனுதாரருக்கு அறிவுரை வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00