காற்றின் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் விளக்‍கம்

Jul 7 2020 5:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனா வைரஸ், காற்றின் மூலம் பரவாது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனம் மீண்டும் உறுதிப்பட தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுமா? பரவாதா? என்பது குறித்து மக்‍களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இந்த சூழலில், 32 நாடுகளைச் சேர்ந்த 239 விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது என்றும், காற்றின் மூலம் அது பரவும் என்றும் கூறப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் இதற்கு மறுப்பு தெரிவித்தது. காற்றின் மூலம் கொரானா வைரஸ் பரவாது என்று கூறியது. இந்த கருத்தை இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனமான CSIR உறுதி செய்துள்ளது.

கொரோனா வைராசால் பாதிக்கப்பட்டவர்கள், தும்மும் போதும், இருமும் போதும் அவர்களிடமிருந்து கொரோனா வைரஸ்கள் சில அடி தூரம் காற்றில் பறந்து சென்று கீழே விழும். இதை வைத்து அது காற்றில் மிதக்கும் தன்மை கொண்டது எனக்‍ கூற முடியாது என CSIR ​தெரிவித்துள்ளது. காற்றில் பரவும் வைரசுகள், எப்போதும் காற்றில் மிதந்து கொண்டிருக்கும் தன்மை கொண்டவை என்றும் விளக்‍கம் அளிக்‍கப்பட்டுள்ளது. அந்த வகையில் சின்னம்மை, பெரியம்மை, இன்புளூயன்சா போன்ற வைரசுகளே காற்றில் பரவும் என்றும், கொரோனா காற்றில் பரவாது என்றும் CSIR கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00