இந்தியாவில் முன்பு எப்போது இல்லாத அளவில் ஒரு நாளில் 26 ஆயிரத்து 506 பேருக்‍கு கொரோனா தொற்று - மேலும் 475 பேர் உயிரிழப்பு

Jul 10 2020 11:44AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 26 ஆயிரத்து 506 பேருக்‍கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்த வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணிநேரத்தில் 475 பேர் உயிரிழந்ததாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்‍கை 21 ஆயிரத்து 604-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 26 ஆயிரத்து 506 பேர் கொரோனா பாதிப்புக்‍குள்ளாகியிருக்‍கின்றனர். மொத்தம் 7 லட்சத்து 93 ஆயிரத்து 802 பேர் பாதிக்‍கப்பட்ட நிலையில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 513 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2 லட்சத்து 76 ஆயிரத்து 685 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இதுவரை நாட்டில் மொத்தமாக 1 புள்ளி 10 கோடி ரத்த மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 2 லட்சத்து 83 ஆயிரத்து 659 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00