750 மெகாவாட் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் - காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

Jul 10 2020 2:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

மத்தியப் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 750 மெகாவாட் சூரிய மின் சக்தி நிலையத்தை நாட்டுக்கு மக்‍களுக்‍கு, பிரதமர் திரு. நரேந்திர மோதி அர்ப்பணித்தார்.

மத்திய பிரதேசத்தின் Rewa பகுதியில் சூரிய ஆற்றலிலிருந்து 750 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கா் பரப்பளவில் இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை, பிரதமா் திரு. நரேந்திர மோதி, டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்து நாட்டுக்கு மக்‍களுக்‍கு அர்ப்பணித்தார். இத்திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 15 லட்சம் டன் கரியமில வாயு வெளியேற்றப்படுவது தடுக்கப்படும். Rewa சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலமாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 24 சதவீதத்தை டெல்லி மெட்ரோ நிறுவனம் பெறவுள்ளது. மீதமுள்ள 76 சதவீத மின்சாரமானது மத்திய பிரதேச மின் பகிர்மான நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

பின்னர் பேசிய பிரதமர் மோதி, இந்த சோலார் ஆலை மூலம், இங்குள்ள தொழில்களுக்கு மின்சாரம் கிடைப்பது மட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில்களும் பலனடையும் என குறிப்பிட்டார். Rewa-வை தவிர, Shajapur, Neemuch மற்றும் Chhatarpur-ல் உள்ள சூரிய மின் நிலையங்களுக்‍கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் திரு. மோதி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00