கேரளாவில் கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் : கேரளா மற்றும் 12 மாநில அரசுகளுக்‍கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Jul 11 2020 11:49AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில், அன்னாசி பழத்தில் மறைத்து வைக்‍கப்பட்டிருந்த வெடி மருந்து வெடித்ததில் யானை உயிரிழந்தது தொடர்பாக மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகள் பதிலளிக்‍க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கேரள மாநிலத்தில், கடந்த மே மாதம், கர்ப்பிணி யானை ஒன்று அன்னாசி பழத்தை சாப்பிட்டபோது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்தது. இதில் அந்த யானையின் தாடை படுகாயமடைந்தது. இதனால் ஏற்பட்ட வலியை தணிக்‍க, அப்பகுதியில் இருந்த ஆற்றில் இறங்கி தண்ணீரில் நின்றபடியே யானை உயிரிழந்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 21 ஆகியவை ஒவ்வொரு உயிருக்கும் கண்ணியத்துடன் வாழும் உரிமையை அளிப்பதாகவும், ஆனால் வெடிபொருட்களை வைத்து மிருகங்களை கொல்வது அரசியலமைப்பு சட்டத்தை மீறும் செயல் என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். மிருகவதை தடுப்பு சட்டம் 1960-ஐ மேலும் பலப்படுத்தி, மிருகங்களுக்கு எதிராக கொடூர குற்றங்களை செய்வோருக்கு கடும் தண்டனை அளிக்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதுதொடர்பாக, மத்திய அரசு, கேரளா மற்றும் 12 மாநில அரசுகள் பதிலளிக்‍க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00