கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்‍கு கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்பு - ரிசர்வ் வங்கி கவர்னர் பேச்சு

Jul 11 2020 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவின் தாக்‍கத்தால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ் கூறியுள்ளார்.

மும்பையில் இன்று காலை நடைபெற்ற பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாட்டில், ரிசர்வ் வங்கி கவர்னர் திரு. சக்‍தி காந்த தாஸ் காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா தாக்‍கத்தால், போரில்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருவதாக தெரிவித்தார். 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்தித்து வருவதாகவும், அதேநேரம், கொரோனா நெருக்‍கடியை, இந்திய தொழில் நிறுவனங்கள் திறம்பட கையாண்டதாகவும் கூறினார். சரிந்த இந்திய பொருளாதாரத்தை நிலைநிறுத்த, பல்வேறு வங்கிகளுடன் இணைந்து, ரிசர்வ் வங்கி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும், இதன்மூலம், நாட்டில் பொருளாதார வளர்ச்சி தென்படுவதாகவும் தெரிவித்தார். கடந்த ஆண்டு ஃபிப்ரவரி முதல், தற்போதுவரை, ஒட்டுமொத்த அடிப்படையில், ரெப்போ விகிதம் 135 அடிப்படை புள்ளிகள் குறைக்‍கப்பட்டுள்ளதாகவும் திரு. சக்‍தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00