உத்தரபிரதேசத்தில் நடந்த போலீஸ் என்கவுண்டர் சம்பவம் -ரவுடி விகாஸ் தூபே கைது பின்னணியில் கதாநாயகனாக மிளிர்ந்த தமிழக ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ் குமார்

Jul 11 2020 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசத்தில் போலீசார் என்கவுண்ட்டரில் ரவுடி விகாஸ் தூபே கொல்லப்பட்ட நிலையில், அவரது கைதில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி தினேஷ் குமார் முக்கிய பங்காற்றியது தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி விகாஸ் தூபே, தன்னை கைது செய்யவந்த 8 காவலர்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து சுட்டுக்கொலை செய்து தப்பினார். பின்னர் மத்திய பிரதேசத்தில் பிடிபட்ட விகாஷ் தூபே, உத்தரபிரதேசம் கொண்டுவரப்பட்டபோது, தப்ப முயன்றதாகவும், அப்போது போலீசார் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. விகாஷ் தூபே கைதில் முக்கிய பங்காற்றிய கான்பூர் எஸ்.பி. தினேஷ்குமார், தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவர். மேட்டூர் அருகே உள்ள சின்னதண்டா கிராமத்தில் பிறந்த தினேஷ்குமார் 2009 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆனார். பயிற்சிகள் முடிந்து 2013 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த தினேஷ் குமார் 7 மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக சிறப்பாக பணியாற்றி விட்டு கடந்த மாதம் 15-ம் தேதிதான் கான்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார். பதவியேற்று ஒரு மாதம்கூட நிறைவடையாத நிலையில், காவல்துறைக்கு பெரும் சவாலாக விளங்கிய விகாஸ் தூபேவின் அட்டூழியத்தை தினேஷ்குமார் தலைமையிலான அணி அடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00