விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தல் : லாலுபிரசாத் மகன் தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த முயற்சி

Jul 13 2020 1:15PM
எழுத்தின் அளவு: அ + அ -

விரைவில் நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தலில், முன்னாள் முதலமைச்சர் திரு. லாலு பிரசாத் மகன் தேஜஸ்வியை முதல்வராக முன்னிறுத்த முயற்சிப்பதை கண்டு, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பீகார் மாநில சட்டசபைக்கான தேர்தல் வரும் அக்டோபர் -நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. இதனையடுத்து பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியும், காங்கிரஸ், திரு. லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி மற்றும் இதர கட்சிகள் உள்ளிட்டவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. லாலுவின் கட்சி தலைவராக தற்போது அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இந்நிலையில், பாட்னாவில் லாலு கட்சியின் சார்பில் மகளிர் அமைப்பினர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், சட்டசபை தேர்தலில் தேஜஸ்வியை முதல்வராக முன்னிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவு கூட்டணி கட்சியான காங்கிரஸ் உள்ளிட்டோரை அதர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள், தேஜஸ்வி உயர்சாதி எதிர்ப்பு உருவத்தை வைத்துள்ளார் என கூறினர். ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தலை பட்சமாக முடிவை எடுத்து இருப்பதாக பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சியின், இந்துஸ்தானி அவாம் மோர்சா மற்றும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00