இந்திய நிலப்பகுதிகளை எந்த நாடும் ஆக்‍கிரமிக்‍கவில்லை - எல்லைப் பகுதி பாதுகாப்பாக உள்ளதென எல்லை பாதுகாப்புப்படைத் தலைவர் தகவல்

Jul 13 2020 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய நிலப்பகுதிகள் அனைத்தும் நம்மிடம் பாதுகாப்பாக உள்ளதாக இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படை மற்றும் எல்லை பாதுகாப்புப்படைத் தலைவர் திரு. தேஸ்வால் கூறியுள்ளார்.

கிழக்‍கு லாடாக்‍ எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்‍கு பகுதியில் இந்தியா-சீனா ராணுவம் இடையே கடந்த மாதம் 15,16 தேதிகளில் மோதல் ஏற்பட்டது. அப்போது, இந்திய பகுதியை சீனா ஆக்‍கிரமித்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பி.எஸ்.எஃப். முகாமில் பேசிய, இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப்படை மற்றும் எல்லை பாதுகாப்புப்படைத் தலைவர் திரு. தேஸ்வால், இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு என அனைத்து எல்லைப் பகுதிகளும் நம்வசம் பாதுகப்பாக உள்ளதாக தெரிவித்தார். நமது நிலப்பரப்பை பாதுகாப்புப் படைகள்தான் முழுமையாக பயன்படுத்தி வருவதாகவும், பாதுகாப்புப்படை வீரர்கள் மிகுந்த சுறுசுறுப்புடனும், திறனுடனும், அர்ப்பணிப்புடனும் செயலாற்றி வருவதாகவும் கூறினார். எதிரி நாடுகளின் எந்தவித அச்சுறுத்தல்களையும் திறம்பட எதிர்கொண்டு எல்லையைப் பாதுகாக்கும் திறன் நமது வீரர்களுக்‍கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00