ஊரடங்கு விதிகளை மீறிய பாஜக அமைச்சரின் மகன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் - கடமையைச் செய்த பெண் காவலரின் ராஜினாமாவால் குஜராத்தில் பரபரப்பு

Jul 13 2020 6:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நண்பர்களுடன் ஊர் சுற்றிய பாஜக அமைச்சரின் மகனை தடுத்து நிறுத்திய பெண் காவலர் சுனிதா, தனது பணியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், குஜராத்தின் சூரத் நகரில், ஊரடங்கு விதிகளை மீறிய அம்மாநில பா.ஜ.க. அமைச்சர் குமார் சுனானியின் மகன் பிரகாஷ் சுனானியை, அங்கு பணியில் இருந்த பெண் காவலர் சுனிதா தடுத்து நிறுத்தினார். இதனால், அமைச்சரின் மகனுக்‍கும், காவலர் சுனிதாவுக்‍கும் வாக்‍குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஊரடங்கு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர யார் தங்களுக்‍கு அதிகாரம் கொடுத்தது என்று கேள்வி எழுப்பிய சுனிதா, இந்த நேரத்தில் பிரதமரே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன் எனக்‍ கூறினார். மேலும், இரவு 12 மணிவரை காவலுக்‍கு நிற்கும் தாங்கள் என்ன, முட்டாள்களா என்றும் ஆதங்கப்பட்டார். பதிலுக்‍கு பேசிய அமைச்சரின் மகன், 365 நாட்களும், இதே இடத்தில் உன்னை நிற்க வைக்‍கிறேன் என சுனிதாவை மிரட்டியுள்ளார். இதன் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவலர் சுனிதாவுக்‍கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இச்சம்பவத்தையடுத்து பணியிடமாற்றம் செய்யப்பட்ட சுனிதா, தற்போது ராஜினாமா செய்துள்ளதாகக்‍ கூறப்படுகிறது. அவரிடம், கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00