இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதார மேம்பாட்டிற்கு கூகுள் இந்தியா நிதியுதவி - அடுத்த 7 ஆண்டுகளில் 75000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும் என தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தகவல்

Jul 13 2020 5:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில், கூகுள் நிறுவனம் சார்பில் இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.

பிரதமர் திரு. நரேந்திர மோதியும், கூகுள் தலைமை செயல் அதிகாரி திரு. சுந்தர்பிச்சையும் இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். வேலை சூழலில், கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தகவல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது, இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில், கூகுள் நிறுவனம் சார்பில் இந்தியாவில், அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று திரு. சுந்தர்பிச்சை உறுதியளித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் திரு. மோதி, திரு. சுந்தர் பிச்சையுடன், ஆக்‍கப்பூர்வமாக விவாதித்ததாகவும், குறிப்பாக இந்தியாவின் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்ற தொழில்நுட்பத்தின் ஆற்றலை மேம்படுத்துவது குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00