ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையே வலுக்‍கும் பதவிச் சண்டை - காங்கிரஸ் அரசு நீடிப்பதில் பெரும் சிக்‍கல்

Jul 13 2020 6:13PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக்‍ கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஜெய்ப்பூரில் உள்ள Fairmont விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சரான சச்சின் பைலட், முதலமைச்சருடன் ஏற்பட்ட அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்‍கள் சிலருடன் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக செய்திகள் வெளியாகின.

இந்த பரபரப்பான சூழலில் இப்பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், முதலமைச்சர் அசோக்‍ கெலாட் இல்லத்தில் இன்று நடைபெற்றது. இதில், 90-க்‍கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்‍கள் பங்கேற்றனர். அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்துவதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரன்தீப் சுர்ஜ்வாலா, அவினாஷ் பாண்டே, Ajay Makken ஆகியோர் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் சென்றனர்.

சச்சின் பைலட்டுக்‍காக காங்கிரஸ் கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக கூட்டத்தின் முடிவில் தெரிவிக்‍கப்பட்டது. இந்தக்‍ கூட்டத்தை தொடர்ந்து முதலமைச்சர் அசோக்‍ கெலாட் தலைமையில் சுமார் 90 எம்.எல்.ஏ.க்‍கள் சொகுசு பேருந்து மூலம் ஜெய்ப்பூரில் உள்ள Fairmont நட்சத்திர விடுதிக்‍கு அழைத்து செல்லப்பட்டனர். இதுபோன்ற பிரச்சனைகளால் ராஜஸ்தான் அரசு தொடர்ந்து நீடிப்பதில் பெரும் சிக்‍கல் ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00