சீனாவில் முதலீடு செய்ய உலக நாடுகளுக்கு ஆர்வமில்லை : இந்திய தொழில் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு - கட்கரி

Jul 13 2020 6:17PM
எழுத்தின் அளவு: அ + அ -

சீனாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டாததால், இந்திய தொழில் நிறுவனங்களுக்‍கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் திரு. நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள Indian School of Business-ல் இன்று நடைபெற்ற விழாவில், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி, காணொலி வாயிலாக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனா நெருக்‍கடியிலிருந்து இந்தியா மீண்டு வருவதாக தெரிவித்தார். வர்த்தகம் செய்ய ஏற்ற நாடுகளின் பட்டியலில், இந்தியாவிற்கு உலக வங்கி சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளதாக கூறினார். சீனாவில் முதலீடு செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டாததால், இந்திய தொழில் நிறுவனங்களுக்‍கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளதாக தெரிவித்தார். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பெருக்‍குவதும், விவசாய வளர்ச்சி மற்றும் கிராம தொழில் வளர்ச்சியை உயர்த்துவதும்தான் மத்திய அரசின் தற்போதைய முக்‍கிய பணி என்று திரு. கட்கரி குறிப்பிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00