கேரள தங்கக்கடத்தல் வழக்கு - சுங்கத்துறை விசாரணைக்கு பிறகு ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு மீண்டும் சிறை

Aug 1 2020 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள தங்கக்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையிலடைக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், தூதரக அலுவலகத்தின் முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்டோரை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விவகாரத்தில், என்.ஐ.ஏ.வோடு அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க, சுங்கத்துறைக்கு கொச்சி பொருளாதார குற்றவியல் கூடுதல் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள Faisal Fareed, Rabins Hameed ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து, கொச்சி பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சிவசங்கரிடம் NIA அதிகாரிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00