பருவமழை தாக்‍கத்தால் நிலைகுலைந்த கேரளா - ஆலப்புழா, இடுக்‍கி, வயநாடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு Red Alert

Aug 9 2020 5:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

பருவமழைத் தாக்‍கத்தால் பெய்த மழை, கேரளாவை நிலைகுலையச் செய்துள்ளது. அங்கு கனமழை நீடிக்‍கும் என்று தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், ஆலப்புழா, இடுக்‍கி, கோழிக்‍கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்‍கு Red Alert எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

கேரள மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், மூணாறு அருகே ராஜமலை தேயிலை எஸ்டேட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு, 80 பேர் சிக்‍கினர். இவர்களில் 29 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சியுள்ளவர்களின் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் தேடுதல் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் தொடர்ந்து மழை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆலப்புழா, இடுக்‍கி, கோழிக்‍கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்‍கு Red Alert எச்சரிக்‍கை விடுத்துள்ளது.

கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பத்தனம்திட்டா, பாலக்‍காடு ஆகிய மாவட்டங்களுக்‍கு Orange எச்சரிக்‍கையும் விடுக்‍கப்பட்டுள்ளது.

தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மஞ்சள் எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00