கேரள தங்கக்கடத்தல் வழக்‍கில் ஸ்வப்னாவுக்‍கு ஜாமீன் மறுப்பு - கடத்தலுக்‍கான அடிப்படை ஆதாரம் இருப்பதாக கொச்சி NIA நீதிமன்றம் கருத்து

Aug 10 2020 4:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து கொச்சி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில், சரக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 30 கிலோ தங்கக்கட்டிகள் சுங்க அதிகாரிகளிடம் சிக்கியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் உள்ளிட்ட நால்வர் மீது தீவிரவாத செயல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ், என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். தங்கக் கடத்தலில் ஈடுபட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதால், ஜாமின் வழங்க இயலாது எனத் தெரிவித்த நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00