வேளாண் சட்ட மசோதாக்களுக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்பு - பஞ்சாப், அரியானாவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக விவசாய அமைப்புகள் எச்சரிக்‍கை

Sep 18 2020 4:11PM
எழுத்தின் அளவு: அ + அ -

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் ரயில் மறியல் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

மக்‍களவையில் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்‍களுக்‍கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து பஞ்சாப், ஹரியானா மாநில உழவர் அமைப்புகள் வரும் 24, 25, 26 ஆகிய 3 நாட்கள் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இதனிடையே, வேளாண் சீர்த்திருத்த மசோதாக்‍கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு எதிரானது என்றுக்‍ கூறி, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக போராட்டம் நடத்தினர். அப்போது, மசோதாக்‍களின் நகல்களை, பஞ்சாப் காங்கிரஸ் எம்.பி.க்‍கள் தீயிட்டு கொளுத்தினர். மோதி அரசு, விவசாயிகளையும், விவசாயக் கூலிகளையும், விவசாயத்தையும், சில முதலாளிகளின் வீட்டு வாசற்படியில் கிடத்தி அடகு வைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00