விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோதி அரசு நிறைவேற்றியதா? - காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி

Sep 21 2020 4:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியையும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியையும் மோதி அரசு நிறைவேற்றியதா? என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. ப.சிதம்பரம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

வேளாண் மசோதாக்‍கள் குறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள திரு.ப.சிதம்பரம், விவசாயிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வேளாண் அமைச்சகம் உறுதி செய்யும் என்றால், ஏன் இதுவரை அவ்வாறு செய்யவில்லை? விவசாயி, தனது விளைபொருட்களை எந்த வர்த்தகருக்கு விற்றார் என்பதை வேளாண் அமைச்சகம் எப்படி தெரிந்துகொள்ளும்? நாடு முழுவதும் ஒவ்வொரு நாளும் நடக்கும் மில்லியன் கணக்கான பரிவர்த்தனைகளை எப்படி அரசு அறிந்து கொள்ளும்? ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை செலுத்தப்படுவதை வேளாண் அமைச்சகம் எப்படி உறுதி செய்யும்? அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதியை நம்புவதற்கு விவசாயிகள் மிகவும் முட்டாள்கள் என்று மத்திய அரசு நினைக்‍கிறதா? ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என்ற வாக்குறுதியை மோதி அரசு நிறைவேற்றியதா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மோதி அரசு நிறைவேற்றியதா? ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் உறுதிமொழியை மோதி அரசு நிறைவேற்றியதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00