இந்தியாவில் பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்குகிறது - 30 ஆயிரம் பேருக்கு மருந்தை செலுத்தி பரிசோதிக்‍க திட்டம்

Sep 25 2020 11:57AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் 3ம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இதில், சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி, இரண்டாம் கட்ட சோதனை முடிந்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட பரிசோதனையை அக்டோபர் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளது. மூன்றாம்கட்ட சோதனையில் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேருக்கு கோவாக்சின் தடுப்பூசியை பரிசோதிக்கவும் பாரத் பயோடெக் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி 4 முதல் 5 நாடுகளில் கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறது. ஆண்டுக்கு குறைந்தது 1 பில்லியன் கோவாக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுவருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00