ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது புகார் - ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை, விலங்குகளை போல நடத்துவதாக குற்றச்சாட்டு

Sep 25 2020 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வசிக்‍கும் மக்‍களை, பாகிஸ்தான், விலங்குகள் மற்றும் அடிமைகளை போல நடத்துவதாக ஐக்‍கிய நாடுகள் சபையில் புகார் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத்தில், ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த சமூக ஆர்வலர் திரு. முகமது சஜத் ராஜா பேசினார். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்‍களை, பாகிஸ்தான், விலங்குகளைப் போல நடத்துவதாக குற்றம்சாட்டினார். சொந்த மண்ணில் தாங்கள் அடிமைகளைப் போல நடத்தப்படுவதாகவும், இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டு கொள்வதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உலக சிந்தி அமைப்பின் பொது செயலாளர் திரு. லகு லுகானா பேசியபோது, பாகிஸ்தான் புலனாய்வு அமைப்புகளால், சிந்தி மக்கள் காணாமல் போவது தொடர்கதையாகி வருவதாக கூறினார். கடந்த 3 மாதங்களில் மட்டும 60 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாதத்தை பரப்பும் கருவியாக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00