விவசாயிகளை மத்திய பா.ஜ.க. அரசு சுரண்டுவதாக ராகுல் குற்றச்சாட்டு - ஒன்றிணைந்து குரல் எழுப்ப மக்களுக்கு அழைப்பு

Sep 26 2020 3:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளை சுரண்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நம் குரல்களை ஒருங்கிணைந்து எழுப்புவோம் என மக்‍களுக்‍கு திரு. ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

வேளாண் மசோதாக்‍களுக்‍கு எதிராக விவசாயிகளும், எதிர்க்‍கட்சிகளும் போராட்டம் நடத்திவரும் நிலையில், அந்த மசோதாக்‍களை திரும்பபெற வலியுறுத்தி தனது ட்விட்டர் பக்‍கத்தில் திரு. ராகுல் காந்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிகளை சுரண்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்‍கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நம் குரல்களை ஒருங்கிணைந்து எழுப்புவோம் என மக்‍களுக்‍கு அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாய மசோதக்களை ஜனநாயக விரோத முறையில் மத்திய அரசு நிறைவேற்றியதாகவும், இது விவசாயிகள் மீதான தாக்குதல் என்றும், நாட்டின் உயிர்நாடியான வேளாண்மையை தங்களது முதலாளி நண்பர்களுக்கான வருவாய் ஓட்டமாக பா.ஜ.க. அரசு மாற்றியுள்ளதாகவும், காங்கிரசின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்‍கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00