மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரெயில் : வரும் ஜனவரி மாதம் முதல் இயக்கப்படும் என IRCTC தகவல்

Oct 17 2020 10:39AM
எழுத்தின் அளவு: அ + அ -
மசாஜ் மையம் மற்றும் மதுபானக்கூட வசதிகளுடன் கூடிய தங்கரதம் சொகுசு சுற்றுலா ரெயில், வருகிற ஜனவரி மாதம் முதல் இயக்கப்படுகிறது.

ஆடம்பர சுற்றுலா பிரியர்களின் வசதிக்காக கர்நாடக சுற்றுலாத்துறை சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தங்கரதம் சொகுசு சுற்றுலா ரெயில் கடந்த 3 ஆண்டுகளாக இயக்கப்படவில்லை. இந்தநிலையில் அந்த ரெயில் தற்போது இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி. இந்த ரெயிலை தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்பித்து உள்ளது.

ரெயிலில், தங்கும் அறைகள் புதுப்பித்து அலங்கரிக்கப்பட்டு உள்ளன. குளியல் அறைகள் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன. பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டி.வி. வசதி செய்யப்பட்டு உள்ளது.

நவீன எந்திரங்களுடன் கூடிய உடற்பயிற்சிக்கூடமும் உள்ளது. மேலும் இயற்கை காட்சிகளை ரசித்தபடியே உணவு உண்ணும் வகையில் ருசி மற்றும் நளபாகம் என்ற பெயரில் 2 உணவகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இத்தனை அம்சங்களும் கொண்ட இந்த சொகுசு ரெயிலை கர்நாடகம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00