இந்திய-சீன உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு

Oct 17 2020 11:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
லடாக் எல்லை மோதலால் இந்தியா, சீனா உறவில் மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன ராணுவம் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நிகழ்ந்து வருகிறது. இதில் ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன. இதனால் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக லடாக்கின் கிழக்கு எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில் லடாக் மோதலால் இந்தியா-சீனா இடையிலான உறவு மிகவும் மோசமாக பாதித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் திரு. ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆசிய சமூக கொள்கை நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு. ஜெய்சங்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியா கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவுடன் நல்ல உறவை கட்டமைத்து இருந்ததாகவும், எல்லைக் கோட்டுப் பகுதியில் நிலவிய அமைதியே அதற்கு அடித்தளமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், கிழக்கு லடாக் எல்லைக்கோட்டுப் பகுதியில் தற்போது அதிக அளவில் சீனப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது, இந்தியாவின் பாதுகாப்புக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்று திரு. ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00