பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கு மத்தியில் ஏற்பட்ட வெடிகுண்டு பீதி - வாக்குப்பதிவு நடைபெறும் அவுரங்காபாத் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு

Oct 28 2020 12:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் சட்டப்பேரவைக்‍கு முதல்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அவுரங்காபாத் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அம்மாநிலத்தில் குவிக்‍கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்று தேர்தல் நடைபெறும் அவுரங்காபாத்தின் திப்ரா பகுதியில் 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடி குண்டுகளை கைப்பற்றிய சி.ஆர்.பி.எப். போலீசார், அவற்றை பாதுகாப்பாக செயலிழக்கச் செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00