நடிகை குஷ்புவை ஃபாலோ செய்யும் சிராக் பஸ்வான் - கட், டேக், ரிபீட் என சினிமாபோல காட்டும் வீடியோ காட்சிகள்

Oct 28 2020 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடிகை குஷ்புவை போல, மறைந்த மத்திய அமைச்சர் பஸ்வானின் மகனான சிராக் பஸ்வானும், கட், டேக், ரிபீட் என சினிமாத்தனத்தை காட்டும் வீடியோ காட்சிகள், சமுக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின்போது நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். அப்போது, அதனை வீடியோவாக வெளியிட்ட குஷ்பு, தொடர்ச்சியாக பேச முடியாமல், வாய் குழம்பி, ரிபீட் என கூறி, மீண்டும் பேசியது செய்தியளார்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அரசியல் பேட்டியையும், சினிமா ஷூட்டிங் என நினைத்த குஷ்பு, பாஜகவினரின் கேலிப்பொருளாகவும் தற்போது மாறினார். அவரது பேட்டி தொடர்பான வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகியது.

இதேபோல் பீகார் தேர்தலில் போட்டியிடும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் பஸ்வானின் மகனான திரு. சிராக் பஸ்வானும், தனது தந்தையின் அலங்கரிக்கப்பட்ட படத்துக்கு முன்பு, சினிமா நடிகர் போல மேக்கப்பட்டு போட்டுக்கொண்டு, சினிமா ஷூட்டிங்கில் நடந்து கொள்வது போலவே செயல்படுகிறார். பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது இடை நிறுத்தி, ரிபிட், கட் என கூறுவதும், அதை பின்னர் சரி செய்துகொள்ளலாம் என்று கூறுவதும் அவரது போலித்தனத்தை தோளுரித்து காட்டியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00