கேரள தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - ஆயுர்வேத மருத்துவமனையில் வைத்து அமலாக்கத் துறை கைது

Oct 28 2020 2:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரை மத்திய அமலாக்கத் துறை அதிரடியாகக் கைது செய்தது.

திருவனந்தபுரத்தில் ஐக்கிய அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கும், முதலமைச்சரின் முதன்மை செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன் சிவசங்கர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவசங்கரிடம் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ, மத்திய அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் ஏற்கெனவே பலமுறை விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறையின் வழக்கிலிருந்து முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் தாக்‍கல் செய்த மனு இன்று விசாரணைக்‍கு வந்தது. அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும், அவருக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அமலாக்கத் துறை மற்றும் சுங்க இலாகா சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், சிவசங்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, திருவனந்தபுரத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கரை, மத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக கைது செய்து, கொச்சிக்கு ​அழைத்துச் சென்றனர். கேரளாவில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கு இது மீண்டும் நெருக்‍கடியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00