வங்கி தொடங்க பெரு நிறுவனங்களை அனுமதிக்‍கலாம் - ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை

Nov 21 2020 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -
வங்கி தொடங்க பெரு நிறுவனங்களை அனுமதிக்‍கலாம் என ரிசர்வ் வங்கி குழு பரிந்துரை செய்துள்ளது.

தனியார் வங்கிகளுக்‍கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக அமைக்‍கப்பட்ட பி.கே.மொஹந்தி தலைமையிலான ரிசர்வ் வங்கி குழு, அதற்கான அறிக்‍கையை தாக்‍கல் செய்துள்ளது. அதில், உரிய சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு, பெரு நிறுவனங்களை வங்கிகள் தொடங்க அனுமதிக்‍கலாம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. தனியார் வங்கி நிறுவனங்கள், அதிகபட்சமாக 15 சதவீதம் வரை பங்குகள் வைத்திருக்‍கலாம் என்றும், 15 ஆண்டுகளில் அதனை 26 சதவீதமாக உயர்த்திக்‍கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பல்வகை சேவைகளை வழங்கும் பெரு வங்கியாக இருந்தால், முதலீட்டுத் தொகை, ஆயிரம் கோடி ரூபாயாகவும், சிறிய வங்கியாக இருந்தால் 300 கோடியாகவும், முதலீட்டை உயர்த்த வகை செய்யப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00