கர்நாடகாவில் கல்லூரிகள் திறப்புக்‍குப் பிறகு 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று - பரிசோதனை முடிவில் உறுதி

Nov 21 2020 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -
கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் 81 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் 8 மாதங்களுக்கு பின் கடந்த 17 ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. முதல் நாளான 17 ம் தேதி பெங்களூருவில் உள்ள பெரும்பான்மையான கல்லூரிகளில் 100 சதவீதம் மாணவர் வருகை இருந்தது. பிறமாவட்டங்களில் சில கல்லூரிகள் தவிர, பெரும்பான்மையான கல்லூரிகளில் 60 முதல் 80 சதவீதம் மாணவர்கள் கல்லூரிக்கு வந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக உயர் கல்வி இயக்குனரக வட்டாரம் மூலம் தெரிய வருகிறது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் கோவிட்-19 விதி முறைகள் 100 சதவீதம் பின்பற்றப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில் மாணவர்களுக்கு கொரானா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த நான்கு நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் பெங்களூருவில் 57, பல்லாரி மாவட்டடத்தில் 7, ஹாசன் மாவட்டத்தில் 6 உள்பட 81 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00