2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு புகார் வழக்கு : டெல்லி உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அமர்வில் இன்று விசாரணை

Dec 1 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஒதுக்‍கீடு முறைகேடு புகார் வழக்‍கில், மத்திய புலனாய்வுத்துறை தாக்‍கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுக்‍கள், டெல்லி உயர்நீதிமன்ற புதிய நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்‍கு வருகிறது.

2ஜி ஸ்பெக்‍ட்ரம் முறைகேடு வழக்‍கில், தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 17 பேரை சி.பி.ஐ. நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில், மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்‍கத்துறை சார்பில் மேல் முறையீட்டு மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக இந்த மனுக்‍கள் மீதான விசாரணை தள்ளிவைக்‍கப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்‍டோபர் மாதம் 5-ம் தேதிமுதல் டெல்லி உயர்நீதிமன்றம் தினந்தோறும் விசாரணை நடத்தியது. விசாரணை நிறைவடைந்து, அனைத்து மனுக்‍களையும் நீதிபதி திரு.Brijesh Sethi தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். ஊழல் தடுப்பு சட்டத்தில் 2018ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், 2ஜி மேல்முறையீட்டு மனுவில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்‍காது என்றும் தீர்ப்பளித்திருந்தார்.

இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவுக்‍கு எதிராக தாக்‍கல் செய்யப்பட்ட மனுக்‍களை தள்ளுபடி செய்த நீதிபதி திரு. Brijesh Sethi நேற்று பணியில் இருந்து ஓய்வுபெற்றார். இதனையடுத்து, நீதிபதி திரு.Yogesh Khanna தலைமையிலான ஒற்றை நீதிபதி அமர்வுக்‍கு 2G வழக்‍கு மாற்றப்பட்ட நிலையில், இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00