புதிய வேளாண் சட்டங்களுக்‍கு எதிரான விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்தது மத்திய அரசு - விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை

Dec 1 2020 5:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

விவசாயிகளின் போராட்டத்திற்கு பணிந்த மத்திய அரசு எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனினும் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிகளுடனும் ஒரே நேரத்தில் பேச்சு நடத்தாமல் பல்வேறு குழுக்களாக தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநில விவசாயிகள், டெல்லி சலோ போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்த போராட்டம் 6-வது நாளாக தீவிரமடைந்துள்ளது. விவசாயிகளை அச்சுறுத்தும்வகையில், டெல்லி எல்லைப் பகுதியில், காவல்துறையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஹரியானா, பஞ்சாப் எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லி செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், 32 விவசாய சங்கங்களை மட்டும் மத்திய அமைச்சர் தோமர், பேச்சுவார்த்தைக்கு அழைத்ததை நிராகரித்த விவசாய சங்கத் தலைவர்கள் 500-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் போராட்டக் களத்தில் உள்ளதால், அனைத்து சங்கங்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதுவரை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள முடியாது என தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00