கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 2021-ல் சர்வதேச திரைப்பட விழா : முதல்வர் எடியூரப்பா அனுமதி

Dec 2 2020 10:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் சர்வதேச திரைப்பட விழா நடத்துவதற்கு, அம்மாநில முதல்வர் திரு. எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகிறது. இதில், 45 திரைப்பட விழாக்களுக்கு மட்டுமே சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டு இறுதியில் திரைப்பட விழா வெகு விமரிசையாக நடத்தப்படும் நிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக விழா நடக்குமா? என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து கர்நாடக மாநில திரைப்பட அகாடமி தலைவர் சுனில் புராணிக் தலைமையில் நிர்வாகிகள், திரைப்பட துறையினர் கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ம் தேதி முதல் ஒருவாரம் சர்வதேச திரைப்பட விழா நடத்த கூட்டத்தில் தீர்மானிக்‍கப்பட்டது. இதனையடுத்து, இதற்கு அனுமதி பெறும் வகையில், கர்நாடக திரைப்பட துறையினர், முதல்வர் திரு. எடியூரப்பாவை நேற்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். இதனை ஏற்றுக்‍கொண்ட முதல்வர், பெங்களூருவில் திரைப்பட விழா நடத்த அனுமதி வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00