தூத்துக்‍குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்‍க வேதாந்தா நிறுவனம் கோரிக்‍கை - உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

Dec 2 2020 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஸ்டெர்லைட் ஆலையை பரிட்சார்த்த முறையில் 3 மாதங்களுக்‍கு இயக்‍க அனுமதிக்‍க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்‍கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்‍கோரி அப்பகுதி மக்‍கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். அதில், போலீசார் துப்பாக்‍கியால் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்‍கு தொடர்ந்தது. ஆனால், தமிழக அரசின் உத்தரவுக்‍கு தடை விதிக்‍க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஆலையை திறக்க தடை தொடரும் எனவும் உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்‍கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, ஆலையை பரிட்சார்த்த முறையில் 3 மாதங்களுக்‍கு இயக்‍க அனுமதிக்‍க வேண்டும் என்ற ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00