காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் - அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

Dec 2 2020 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கும், அதனை கண்காணிக்க குழு அமைப்பதற்கும் கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன் கொடூரமாக தாக்‍கப்பட்டு உயிரிழந்ததை தொடர்ந்து, விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரின் அத்துமீறலை தடுக்கக்‍கோரி உச்சநீதிமன்றத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்‍கின் விசாரணையின்போது, 2018-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி சிசிடிவி கேமராக்கள் காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ளனவா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், இந்த வழக்‍கு இன்று மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது, காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, வரும் 27-ம் தேதிக்‍குள், அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரம் தாக்‍கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00