சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் நான்கரை கோடி கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வாங்கப்படும் - மத்திய அரசு வெளியிட்ட தகவல்
Jan 12 2021 1:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீரம் நிறுவனத்திடமிருந்து வரும் ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் நான்கரை கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் - ஆஸ்ட்ராசெனிகா நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் உள்ள சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியையும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியையும், அவசர கால தேவைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. வரும் 16-ம் தேதியில் இருந்து, நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், சீரம் நிறுவனத்திடமிருந்து ஒரு கோடி, கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆணையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. ஒரு டோஸ் மருந்தின் விலை 200 ரூபாய் என 231 கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. இந்த தடுப்பூசிகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும், நான்கரை கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை வாங்கவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதன் மதிப்பு ஆயிரத்து 176 கோடி ரூபாயாகும்.